கனமழை எதிரொலி : தயார் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு தகவல்

சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு…

சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து  வருகிறது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்  உள்ளிட்ட 4 மாவடங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு  மழை தொடர  வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த  மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை,  திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சி தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் மழை மீட்பு பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..

“ கனமழை பெய்து வருவதால நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், தண்ணீர் தேங்கினால், அதற்கான காரணத்தை கண்டறிந்து, அப்போதே சரி செய்ய வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மண்டலம், வார்டுகளும் மழைநீர் வடிகால்களில் அடைப்புகளை அகற்ற குழுக்களை தயாராக வைத்திருக்க வேண்டும், சுரங்கப்பாதைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், மரம் விழுந்தால் அகற்ற தேவையான உபகரணங்களுடன் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அவர் மாநகராட்சு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் மாநகராட்சி பணியாளர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக” ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.