தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பெரும்பான்மையை நிரூபிப்பாரா விஜய்…?

தமிழ் நாடு சட்டமன்றத்தில் இன்று தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து காங்கிரஸ், விசிக , சிபிஐ , சிபிஎம் , ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்தன. இதனால் பெரும்பான்மை பெற்ற தவெக கட்சியின் தலைவர் விஜய் கடந்த 10 ஆம் தேதி தமிழ் நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். இந்த நிலையில் தமிழ் நாடு சட்டமன்றத்தில் இன்று (மே.13) காலை 9 : 30 மணிக்கு தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

வாக்கெடுப்பு எப்படி நடைபெறும் …?

புதிதாக தேர்வு செய்யபட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இன்று சட்டமன்றத்தை நடத்துவார். அப்போது ஆளும் தவெக கட்சியில் இருந்து ஒருவர் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிவார். இறுதியாக முதல்வர் விஜய் பேசி தனது அரசின் நம்பிக்கையை கோருவார். இதனை தொடர்ந்து சபாநாயகர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விடுவார். அவையில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவர். வாக்கெடுப்பில் பங்கேற்ற மொத்த உறுப்பினர்களில் 50 % அதிகமானோர் ஆதரவு அளித்தால் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக கருதப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.