தவெக அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு…!

தமிழ் நாடு சட்டமன்றத்தில் நாளை விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்கள் தேவை. இதனை தொடர்ந்து காங்கிரஸ் (5), விசிக (2), சிபிஐ (2), சிபிஎம் (2), ஐயுஎம்எல் (2) உள்ளிட்ட கட்சிகள் அளித்த ஆதரவின் முலம் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி தமிழ் நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். மேலும் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்றது.

இந்த நிலையில் தமிழ் நாடு சட்டமன்றத்தில் விஜய் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (மே.13) நடைபெறுகிறது. இது தொடர்பாக சட்டமன்றச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த வாக்கெடுப்பு நாளை காலை 9 : 30 மணிக்கு நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.