எடப்பாடி பழனிசாமி உளறலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: டிடிவி தினகரன்

அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதற்றம் அடைந்து பதிலளித்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுபயனம் மேற்கொண்டு வருகிறார்.…

அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதற்றம் அடைந்து பதிலளித்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுபயனம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமராக்கியில் கட்சி கொடியை ஏற்றிவைத்ததுடன், ஊராட்சிமன்ற தலைவரும், அமமுக அம்மா பேரவை மாவட்ட இனை செயலாளருமான முருகானந்தம் என்பவரின் வீட்டு காதனி விழாவில் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தினார்.

இதனை தொடர்ந்து, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், சேலத்தில் நேற்று டிடிவி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த அதிமுக பொதுச்செயலாளர்,  எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனின் ஊழல் பட்டியலை முதலில் வெளியிட்டால் சரியாக இருக்கும். லண்டன் வரை சொத்து குவித்துள்ளார். அது தொடர்பாக திமுக பல்வேறு செய்திகளை வெளியிட்டது. எனவே டிடிவி தினகரனுக்கு சொந்தமாக லண்டனில் இருக்கின்ற சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடைமையாக்க வேண்டும் என கூறியிருந்ததற்கு பதிலளித்து பேசினார் .

அப்போது, அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதற்றம் அடைந்து பதிலளித்துள்ளார். அவரின் உளறலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  எனக்கு லண்டனில் சொத்து இருந்தால் நானே அரசிடம் ஒப்படைத்துவிடுவேன். ஆனால் அப்படி எதுவும் என்னிடத்தில் இல்லை. இபிஎஸ் பயத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்களை என் பக்கம் திசை திருப்புவது ஏன் என தெரியவில்லை என கூறினார். தொடர்ந்து, அவரிடம், பாஜவுடனான கூட்டணி குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய அவர், பாஜவுடனான கூட்டணி குறித்து இந்த ஆண்டு இறுதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் என ஏற்கனவே தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டை பாதிக்க கூடிய திட்டங்களை, குறிப்பாக ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகள், பொது மக்கள் எதிர்த்த திட்டங்களை கொண்டு வந்ததால் மத்திய ஆளும் அரசிற்கு எதிராக அந்த கருத்தை
தெரிவித்தேன். இனி வாழ்நாள் முழுவதும் இல்லை என தெரிவிக்கவில்லை. அன்மையில் கூட நிலக்கரி ஆய்வறிக்கை வெளியிட்ட பிறகு எதிர்ப்பு தெரிவித்தோம். உடனடியாக மத்திய அரசு அதனை திரும்ப பெற்றது. மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டுவந்தால் எதிர்ப்பதும், நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது ஆதரிப்பதும் இயல்பு என கூறினார்.

இதனை தொடர்ந்து ஒ.பி.எஸ் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், மாநாட்டிற்கு பிறகு என்ன விளைவு ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தினகரன் பேசினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.