நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ருத்ரன் திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ.3.5 கோடியை வசூல் செய்துள்ளதாக 5 ஸ்டார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராகவா லாரன்ஸ் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ருத்ரன். இந்த திரைப்படம் தமிழ்புத்தாண்டான கடந்த ஏப்ரல் 14 அன்று வெளியானது. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து அவரே இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் ருத்ரன் படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ. 3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக லாரன்ஸ் படங்கள் என்றால் குடும்பம் குடும்பமாக படத்தை காண கூட்டம் வரும். இந்த படத்திற்கும் அதே வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் நாட்களில் நல்ல வசூலை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.








