இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்- ஜி.கே.வாசன்

இந்தியாவில் ஹாட்ரிக் சாதனை புரிந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைத்து சாதனை புரிவார் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பகுதியில் தமிழ் மாநில…

இந்தியாவில் ஹாட்ரிக் சாதனை புரிந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக
நரேந்திர மோடி ஆட்சி அமைத்து சாதனை புரிவார் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்த பின்பு கட்சி நிர்வாகிகள் இல்ல விழாவிற்கு வருகை புரிந்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், தமிழக மக்களிடம் பொய்யான பல வாக்குறுதிகளை கொடுத்து திமுக அரசு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதில் 500 மது கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது கண் துடைப்பு என்று கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த ஊழல் பட்டியல் அனைத்தும் உண்மையானது. இது வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிராக பிரதிபலிக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனை தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை.
சேது சமுத்திர திட்டத்தை உடனே துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதரம் பாதிக்கபட்டு வருகிறது. தடை கால நிவாரண உதவித் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்.

இந்தியாவில் ஹாட்ரிக் சாதனை புரிந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக
நரேந்திர மோடி ஆட்சி அமைத்து சாதனை புரிவார். பிரதமர் மோடி பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறார் என ஜிகே வாசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.