இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் எவ்வளவு? – விவரங்களை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

2024-ம் ஆண்டிற்கன இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இவற்றில் இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொடர்பான அறிவிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.…

2024-ம் ஆண்டிற்கன இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இவற்றில் இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொடர்பான அறிவிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் உரையில் கல்வி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது..

  • இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 14 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
  • மேலும், கடந்த நிதியாண்டின் திருத்தியமைக்கப்பட்ட செலவினத் தொகை ரூ. 44.90  லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
  • அதேபோல உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 5.8 சதவிகிதமாக உள்ளது.

என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.