“என் என்ட்ரி அப்படியே மாஸா இருக்கும்..” – வெளியானது ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் ப்ரோமோ!

‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். அதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கிங்ஸ்டன்’, ‘Blackmail’ திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதற்கிடையே, ஜி.வி.பிரகாஷ், அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ‘Immortal’ என்ற படத்தில் நடித்து வருகிறது.

https://x.com/gvprakash/status/2002358588854186462

தொடர்ந்து, ஜிவி பிரகாஷ் ‘ஹாப்பி ராஜ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கி வருகிறார். இதில் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காதல், நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த நிலையில், ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.