சென்னையில் கனமழை எதிரொலி! 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, ஈரோடு, திருப்பதி, மைசூரு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…

பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, ஈரோடு, திருப்பதி, மைசூரு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று(அக்.15) மாலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி – சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16058) ரயில் ரத்து செய்யப்பட்டது. இன்று(அக்.15) மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) ரயிலும் ரத்து செய்யப்பட்டது. இன்று(அக்.15) இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று(அக்.15) இரவு 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் (16021) ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.