பிரிட்டிஷ் கடல் எல்லையில் மீன் பிடித்த 67 படகுகளுக்கு 30 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டாக தடை விதித்துள்ளதை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த மீனவர்கள் 67 படகுகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். மீன் அதிகம் கிடைக்கும் என்பதற்காக
பிரிட்டிஷ் கடல் எல்லையில் மீன் பிடித்துவிட்டு இந்திய கடல் எல்லைக்கு வந்து விட்டனர்.
ஸ்கேனிங் மூலமாக இதை தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் கடற்படையினர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீன்வளத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து 67 படகுகளுக்கு 20 லட்ச ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும்
மீன்பிடிக்க தடையும் விதித்ததாக கூறப்படுகிறது.
இதனையும் படியுங்கள்: மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு புதிய தலைவர் நியமனம்
மீனவர்கள் தெரியாமல் எல்லை தாண்டிய இந்த விவகாரத்தில் கடந்த ஓர் ஆண்டுகளாக மீன்பிடி தடை ஏற்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக வருத்தம் தெரிவித்தனர்.
இதனையும் படியுங்கள்: கோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனை
எனவே உடனடியாக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தூத்தூர் பகுதி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்தனர்.







