சென்னையில் அரசு மருத்துவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை – ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை!

அரசு மருத்துவர் வீட்டில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக…

அரசு மருத்துவர் வீட்டில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், தனது குடும்பத்துடன் திருவான்மியூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் சரவணன் தங்கி உள்ளார்.

இந்நிலையில் கொட்டிவாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த தங்க நகை, வெள்ளிப் பாத்திரங்கள், டிவி, லேப்டாப், பிரிட்ஜ் என 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் : காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் – ரூபி மனோகரன் வலியுறுத்தல்

தனது வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன், இதுகுறித்து  நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.