கோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனை

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தர்பூசணி பழங்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. சில நாட்களாக  கோடை காலம் முன்பே தொடங்கியது போல் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலங்களில்…

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தர்பூசணி பழங்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

சில நாட்களாக  கோடை காலம் முன்பே தொடங்கியது போல் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலங்களில் மக்கள் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்கள் விற்பனையானது களைக்கட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை ஏராளமான பொதுமக்கள் விரும்பு உண்கின்றனர்.

தர்பூசணிபழம் தான் அனைத்து தரப்பு மக்களும் அதிகமாக விரும்பி உண்ணும் ஒரு உணவுப் பொருளாக உள்ளது.  நீர்ச்சத்தும் , இனிப்பு மிகுந்து சுவையானதாக காணப்படும் தர்பூசணிக்கு ,கோடை காலத்தில் எப்போதும் தனி இடம் உண்டு. எனவே  தற்போது வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில் தர்பூசணி பழ விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

இதனையும் படியுங்கள்: வாட்சப்பில் தவறுதலாக அனுப்பிய பதிவுகளை எடிட் செய்யலாமா.? – எப்புட்ரா..?

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், தற்போது தர்பூசணி பழங்கள் விற்பனையானது அமோகமாக நடைபெற்றுவருகிறது .ஒரு கிலோ தர்ப்பூசணி பழம் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பழங்கள் அனைத்தும் திண்டிவனம் , விழுப்புரம் பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தென்காசி பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 தற்போது , வாரத்திற்கு பத்து டன் அளவிற்கு தர்பூசணி பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு,
விற்பனையாகி வருவதாக தர்பூசணி பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் . மேலும், தென்காசியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக, ஆங்காங்கே
தற்காலிக கடைகள் அமைத்து இந்த தர்பூசணி பழங்கள் விற்பனையானது நடைபெற்று
வருகிறது.

அண்மைச் செய்தி:அதானி குழும விவகாரம் – காங்கிரஸ் கட்சி மெகா பேரணி அறிவிப்பு

இதில், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, அலுவலகங்கள்,
கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் என ஏராளமானோர் , தர்பூசணி பழங்களை கிலோ கணக்கில் வாங்கி வருகின்றனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.