சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!

சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும்…

சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய் மற்றும்
காவல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிவகாசி அருகே பாறைப்பட்டியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பேராபட்டியில் இயங்கி வருகிறது.  நாக்பூர் லைசன்ஸ் உள்ள இந்த பட்டாசு ஆலையில் விதிமுறைகளை மீறி பட்டாசு உற்பத்தி பணிகள் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலைக்கு வட்டாட்சியர் சாந்தி நேரடியாக சென்று எச்சரிக்கை செய்துள்ளார்.

மீண்டும்  விதிமுறைகளை மீறி கூடுதலாக ஆண், பெண் உட்பட 300க்கு மேற்பட்ட பணியாளர்களை வைத்த திறந்த வெளி மற்றும் மரத்தடியில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தனர்.

இதனை அறிந்த வட்டாட்சியர் சாந்தி,  சிவகாசி டிஎஸ்பி தனஞ்செயன், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சென்று பட்டாசு ஆலையில் ஆய்வு செய்து 5 குடோன் மற்றும் பட்டாசு ஆலைக்கு சீல் வைத்தனர்.   பட்டாசு ஆலையின் உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.