தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கடலாடியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28,  29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில்…

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28,  29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசுபொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

இந்தாண்டு இதனையொட்டி, கடலாடியில் மாநில அளவிலான இரட்டை மாட்டுவண்டி பந்தயம் பெரியமாடு,  சின்னமாடு,  நடுமாடு என 5 பிரிவுகளாக நடைபெற்றது.   இப்போட்டிக்கு ராமநாதபுரம்,  சிவகங்கை,  மதுரை, விருதுநகர்,  தூத்துக்குடி என
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் பந்தய
வீரர்களும் பங்கேற்றனர்.

இப்போட்டியில் பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி அதிவேகத்தில் சீறி
பாய்ந்து சென்றன.  இறுதியில், போட்டியில் வெற்றி பெற்ற பந்தய வீரர்கள் 10 லட்சம் ரூபாய் ரொக்க பணம்,  நினைவு பரிசு,  குத்துவிளக்கு ஆகியவற்றை தட்டிச் சென்றனர்.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தை காண சாலையின் இருபுறமும் ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் நின்று ஆர்வமுடன் கண்டு ரசித்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.