“தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சம் செய்பவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த விழா அரசு விழாவா? அல்லது மாநாடா? என்று வியப்பாக இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் கைவினைத்திட்டம் மண்டல அளவிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,595 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திண்டுக்கல் என்பது புரட்சி, எழுச்சி, வீரத்தின் பெயர். ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் நடமாடிய இடம் திண்டுக்கல். தீரர்கள் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களை சந்திப்பதில் பெருமை. இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து விட்டு இங்கே வந்திருக்கிறேன். ஆதிமுக ஆட்சியில் நெல் கொள்முதல் செய்ததை விட 4.5 ஆண்டுகளில் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இது அரசு விழாவா அல்லது மாநாடா என்று வியக்கும் வண்ணம் உள்ளது. உங்கள் முகங்களில் மகிழ்ச்சியை காணத்தான் பல திட்டங்களை அரசு செய்து கொண்டிருக்கிறது. கலைஞர் கனவு இல்லம் மூலம் 10 ஆயிரம் வீடுகளை கொடுத்துள்ளோம். ரூ.3500 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவிளான பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. உங்களுக்கான 8 புதிய அறிவிப்புகள். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியல் மின்விளக்குகளுக்காக 14 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்படும், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பிற்காக ஒதுக்கீடு. பொங்கல் திருநாள் முன்னிட்டு முன்கூட்டியே வேஷ்டிகள் அனுப்பபட்டுள்ளது அனைத்து மாவட்டகளுக்கும். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம் உள்ளிட்ட தொகுப்போடு 3000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும். இந்த திட்டத்தை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.

2026 தேர்தலில் தமிழ்நாட்டை நீங்க ஆளனுமா? இல்லை ஆதிமுக மூலம் டெல்லியிலிருந்து ஆள வேண்டுமா என்பது தான் தேர்தல். தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சகம் பண்ணும் உங்களை எப்படி மக்கள் நம்புவார்கள். மீண்டும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.