Fact Check : தெலங்கானாவில் AIMIM-க்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டாரா?… வைரலான வீடியோ – உண்மை என்ன?

This News is Fact Checked by News Meter தெலங்கானாவில் நடைபெற்ற பேரணியின் போது ஏஐஎம்ஐஎம்-க்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் பிரதமர் மோடியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி AIMIM-kku…

This News is Fact Checked by News Meter

தெலங்கானாவில் நடைபெற்ற பேரணியின் போது ஏஐஎம்ஐஎம்-க்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் பிரதமர் மோடியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி AIMIM-kku ஆதரவா?

மக்களவைத் தேர்தலுக்கான 4-வது கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சி 400 இடங்கள் என்ற இலக்கை எட்டுவதற்காக தென் மாநிலங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.  இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அவர் அசாதுதீன் ஒவைசியின் கட்சியான AIMIM க்கு ஆதரவளித்ததாகக் கூறப்படுகிறது.

ஏ.ஐ.எம்.ஐ.எம்-க்கு வாக்கு கேட்கும் பிரதமர் மோடியின்?…

வைரலாகி வரும் வீடியோவில், பிரதமர் மோடி, “தெலங்கானா சொல்கிறது,  காங்கிரஸ் நாக்கோ… பிஆர்எஸ் நாக்கோ… பாஜக நாக்கோ… ஏஐஎம்ஐஎம் கோ ஜிதேங்கே” என்று கூறியதாக கூறப்படுகிறது. “இதன் அர்த்தம், தெலங்கானா காங்கிரஸ் வேண்டாம்… பிஆர்எஸ் வேண்டாம்… பாஜக வேண்டாம்… ஏஐஎம்ஐஎம்-க்கு மட்டுமே வாக்களிப்போம் என்று கூறுவதாக வீடியோ காட்டுகிறது.”

@MdMasi13 என்ற பயனர் இந்த 26 வினாடி வீடியோவை சமூக ஊடக தளமான X இல் பகிர்ந்துள்ளார்.  “ஹைதராபாத்தில் AIMIM ஐ மோடி ஆதரித்தார்” என்று அந்த பயனர் தலைப்பில் எழுதினார்.

ஆடியோவில் குளறுபடி செய்து உருவாக்கப்பட்ட போலி வீடியோ….

நியூஸ்மீட்டரின் விசாரணையில் வைரலான வீடியோவின் ஆடியோ எடிட் கண்டுபிடிக்கப்பட்டது.  வைரலாகி வரும் இந்த வீடியோவின் முழு வீடியோ பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் உள்ளது.  இந்த வீடியோ மே 10 அன்று பதிவேற்றப்பட்டது.

அசல் வீடியோவில் பிரதமர் மோடி என்ன சொன்னார்?

இந்த முழு வீடியோவும் 44:35 நிமிடங்கள் ஆகும்.  இந்த வீடியோவில், 12:47 நிமிடத்தில், பிரதமர் மோடி,  காங்கிரஸ்… நாக்கோ (இல்லை என்று அர்த்தம்),  பிஆர்எஸ்… நாக்கோ,  ஏஐஎம்ஐஎம்… நாக்கோ,  ஒவ்வொருவரும் பாஜகவுக்கு வாக்களியுங்கள்,  பாஜகவுக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.  இந்த வீடியோவின் எந்தப் பகுதியிலும் பிரதமர் மோடி AIMIM ஐ ஆதரிக்கவில்லை.

Note : This story was originally published by ‘ News Meter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.