தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  எச்சரிக்கை,  தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், …

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  எச்சரிக்கை,  தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இடி,  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:உலக கோப்பை இறுதிப் போட்டி | டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு!

அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் ராமநாதபுரம், நாகபட்டினம், திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பொழிய அதிக வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் சிவகங்கை, கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பொழிய அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் தென் மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.