டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
13வது உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், சிறப்பாக விளையாடிய இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
தோல்வியே காணாமல் 10 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடிய இந்திய அணி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த தொடரில், 8 ஆட்டங்களில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் மோதுகிறது.







