ஹாலிவுட் இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கத்தில் வெளியான மொமண்டோ, இன்சப்ஷன், டெனட், உள்ளிட்ட திரைப்படங்கள் பெரும் வெற்றியடைந்தன.
மேலும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடித்து 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஓப்பன் ஹெய்மர்’ திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.
இதனை தொடர்ந்து கிறிஸ்டோபர் நோலன் கிரேக்க இதிகாசமான ஒடிஸியை தழுவி புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘தி ஒடிஸி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் ‘தி ஒடிசி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் முழுக்க முழுக்க IMAX ஃபிலிம் கேமராக்களால் படமாக்கப்பட்டது. 17 7 26 அன்று திரையரங்குகளில் தி ஒடிசி டிரெய்லரை பார்த்து, திரைப்படத்தின் அனுபவத்தை பெறுங்கள் pic.twitter.com/MiGFqC4ON0
— Universal Pictures India (@UniversalIND) December 22, 2025







