தனியார் பேருந்து அனுமதியை ரத்து செய்ய கோரி சி.ஐ.டி.யு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி தருவது கண்டித்தும் சி.ஐ.டி.யு – யினர் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சென்னை பல்லவன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த…

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி தருவது
கண்டித்தும் சி.ஐ.டி.யு – யினர் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சென்னை பல்லவன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி தருவது
கண்டித்தும் தமிழக அரசையும், மாநகர போக்குவரத்துக் கழகத்தையும் கண்டித்து
சி.ஐ.டி.யு – யினர் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சென்னை பல்லவன்
சாலையில் அமைந்துள்ள போக்குவரத்து பணிமனையில் பேருந்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிஐடியு பொது செயலாளர் தயானந்தம் தெரிவித்ததாவது..

இன்று சென்னையில் உள்ள 31 பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. தமிழக அரசு மோட்டார் வாகன சட்டம் 288A சட்டத்தை கடந்த அதிமுக அரசு கொண்டுவந்தது. கடந்த அதிமுக ஆட்சியின் போது திமுக சார்பில் மிக வலுவான ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு அதிமுக சார்பில் மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற்றது. இந்த ஆட்சி தற்போது மீண்டும் அதை கையில் எடுத்துள்ளது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்த வருடம் 500 பேருந்துகளும், மேலும் 2025 ஆம் ஆண்டு 500 பேருந்துகளும்
தனியாருக்கு விடுவது என்பது போக்குவரத்து துறை பிரச்சனை மட்டும் அல்ல
மக்களுக்கான பிரச்சினையாக இருக்கும். தற்போது பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள் , பெண்கள் என இலவசமாக மக்கள் பயணம் செய்கின்றனர். இன்றைய தினம் 500 பேருந்துகள் தனியாருக்கு விட்டால் அந்த இலவசம் உண்டா..?

இதனையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் – வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி

கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க
தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

சென்னையை  பொறுத்தவரை லாபத்தில் எந்த போக்குவரத்து கழகம் செயல்படாது. அதற்கான வரவு செலவுகளை அரசு ஏற்க வேண்டும். மற்ற துறைகளுக்கு எப்படி நிதி
ஒதுக்கப்படுகிறதோ அதேபோன்று போக்குவரத்து கழகத்திற்கும் தனியாக நிதி
ஒதுக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாகும்.

இதனையும் படியுங்கள்: பிரம்மாண்டமாக நடைபெற்ற நியூஸ் 7 தமிழின் “தங்கத் தாரகை” விருது வழங்கும் விழா

போக்குவரத்து கழகம் இருந்தால் தான் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு பாதுகாப்பு பெற முடியும்.  இந்த நிலை தொடரும் என்றால் இதற்காக அனைத்து சங்கங்களும் இணைந்து ஒரு வலுவான போராட்டத்தை நடத்துவோம். வாய்ப்பு இருந்தால் வேலை நிறுத்தத்தை நோக்கியும் செல்வோம். ஆகையால் அரசு தொழிலாளர்கள் வாழ்க்கையோடு விளையாடாமல் தனியாருக்கு விடப்பட்ட டெண்டரை கைவிட வேண்டும்“   என தயானந்தம் தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.