நியூஸ்7 தமிழ் செய்தி தொலைக்காட்சியின் சார்பாக ஆண்டு தோறும் வழங்கப்படும் தங்கத் தாரகை விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி 11 பிரிவுகளில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நியூஸ்7 தமிழ் செய்தி தொலைக்காட்சியின் சார்பாக ஆண்டு தோறும் வழங்கப்படும் தங்கத் தாரகை விருது வழங்கும் விழா, சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் இன்று மாலை கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூஸ் 7 தமிழின் சார்பாக பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், நிகரென கொள்-2023 என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், போன்ற நிகழ்வுகளை நியூஸ்7 தமிழ் நடத்தி வருகிறது.
நியூஸ் 7 தமிழ் ஆண்டுதோரும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு “தமிழ் ரத்னா விருது” மற்றும் பெண் ஆளுமைகளுக்கு தங்கத் தாரகை” எனும் பெயரில் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. தங்கத் தாரகை விருது வழங்கும் விழாவில் கல்வி, எழுத்து, கலை, மருத்துவம், தொழில், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல், விளையாட்டு, ஆடை வடிவமைப்பு, மற்றும் வாழ்நாள் தாரகை மற்றும் சிறப்பு தாரகை விருதுகள் என 11 விருதுகள் வழங்கபட்டன.
நிகழ்ச்சியின் துவக்கமாக தங்கத் தாரகை விருது வழங்கும் விழாவில் மகளிர் சுய உதவி குழு பெண்களால் நடத்தப்பட்டு வரும் ஆரண்யா ஹெல்த் கேர் நிறுவனத்தின் பொருட்களை நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
நியூஸ்7 தமிழ் “தங்கத் தாரகை” விருது வழங்கும் விழாவில் மருத்துவர் சுதா சேஷய்யனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருந்துனை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மேலாண் இயக்குனர் சுப்ரமணியம் வழங்கி கௌரவித்தார்
புகைப்பட நிலையம் நடத்திவரும் புகைப்படக் கலைஞரான டி.நவநீதம் அம்மாளுக்கு
”கலை தாரகை” விருதினை சென்னை தாம்பரம் மெப்ஸ் இணை ஆணையர் அலெக்ஸ் பால் ஐஏஎஸ், மூத்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி, ஐ கேர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் கார்த்திக் ஸ்ரீதர் ஆகியோர் விருது வழங்கி கௌரவித்தனர்
திருநெல்வேலியை சேர்ந்த இளம் மாணவி எம்.சூடாமணிக்கு ”எழுத்து தாரகை” எனும் எழுத்தாளர் விருதினை சென்னை தாம்பரம் மெப்ஸ் இணை ஆணையர் அலெக்ஸ் பால் ஐஏஎஸ், மூத்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி, ஐ கேர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் கார்த்திக் ஸ்ரீதர் ஆகியோர் விருது வழங்கி கௌரவித்தனர்
சென்னையை சேர்ந்த ஷைனி அஷ்வினுக்கு ”ஆடை வடிவமைப்பு தாரகை ” விருதினை தாட்கோ மேலான் இயக்குனர் கந்தசாமி ஐபிஎஸ், சுங்கத்துறை கூடுதல் இயக்குனர்
செந்தில் வேலவன் ஐ ஆர் எஸ்,மற்றும் வழக்கறிஞர் கயல் அங்கயர் கன்னி ஆகியோர் வழங்கினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பி.மலர்விழி எனும் இளம் ஆசிரியருக்கு “கல்வி தாரகை” விருதினை தாட்கோ மேலான் இயக்குனர் கந்தசாமி ஐபிஎஸ், சுங்கத்துறை கூடுதல் இயக்குனர் செந்தில் வேலவன் ஐ ஆர் எஸ், வழக்கறிஞர் கயல் அங்கயர் கன்னி ஆகியோர் வழங்கினர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாம்பழ கூழ் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் வி.சாந்திக்கு ”தொழில் தாரகை” விருதினை நீயா நானா நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனி, நடிகை காயத்ரி ரகுராம், சமூக செயற்பாட்டாளர் ஓவியா ஆகியோர் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்
கோவையை சேர்ந்த வலுத்தூக்கும் பெண்மணி ஆர்.மாசிலாமணிக்கு ”விளையாட்டு தாரகை ” விருதினை நீயா நானா நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனி, நடிகை காயத்ரி ரகுமான், சமூக செயற்பாட்டாளர் ஓவியா ஆகியோர் வழங்கினார்.
பழனியை சேர்ந்த மருத்துவர் டி.செந்தாமரை செல்விக்கு “மருத்துவ தாரகை” விருதினை கவிஞர் திலகபாமா, பத்திரிக்கையாளர் கார்த்திகேயன், ஐ கேர் மருத்துவமனை மருத்துவர் நித்தியா ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்
நியூஸ்7 தமிழ் தங்கத் தாரகை விருதின் ”வேளாண் தாரகை” விருதினை பெண்கள் இயற்கை விவசாய கூட்டுறவு குழுவிற்கு நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள், பத்திரிக்கையாளர் லட்சுமி, எஸ்.டி.ஆர் அபிஷேக் ஆகியோர் விருதினை வழங்கி கௌரவித்தனர்
நியூஸ்7 தமிழ் தங்கத் தாரகை விருதின் ”சிறப்பு தாரகை” விருது ஜோதிடர் பாரதி ஸ்ரீதருக்கு வழங்கப்பட்டது. சிறப்பு தாரகை விருதினை நியூஸ் 7 தமிழ் மேலாண் இயக்குனர் சுப்பிரமணியன், இயக்குனர்கள் திலீபன், பாலா ஆகியோர் வழங்கினார்
நியூஸ்7 தமிழ் தங்கத் தாரகை விருது வழங்கும் விழாவில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வி சி க தலைவர் திருமாவளவன் எம்.பி உறுதிமொழியை வாசிக்க விழாவில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நியூஸ்7 தமிழ் தங்கத் தாரகை விருதின் ”சிறப்பு தாரகை” விருதினை பரத நாட்டிய கலைஞர் சுபவதனா சந்திரமோகனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, வழங்கி வாழ்த்தினார். நியூஸ்7 தமிழ் முன்னெடுப்பு நிகழ்ச்சியான மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தில் திருமாவளவன் எம்பி கையெழுத்திட்டார்