Gold Rate | தங்கம் விலை உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 130 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு, தங்கம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து ஆட்டம் காட்டியது. இருப்பினும், தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது.

இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320-க்கும் சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960-க்கும் விற்பனையாகிறது.

இந்த நிலையில் தற்போது ஒரு கிராம் தங்கம் விலை ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,250-க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.1040 உயர்ந்து ரூ. 1,14,500-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மாற்றம் இன்றி அதே விலையில் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.