தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் – வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி

தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் அதனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதி செய்துள்ளது தமிழ்நாடு வணிசங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் வணிகர் சங்க…

தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் அதனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதி செய்துள்ளது தமிழ்நாடு வணிசங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் வணிகர் சங்க ஆண்டு விழாவை
வணிகர்களின் குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டது, இதில் சிறப்பு விருந்தினராக
கலந்துக்கொண்ட தமிழ்நாடு வணிசங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வருகை புரிந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்கத்தினருடன் இணைந்து பல்வேறு வணிக நிறுவனங்களின் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் உற்சாகமாக நடனமாடி விழாவிற்கு அவரை வரவேற்றனர்.

இதனையும் படியுங்கள்: பிரம்மாண்டமாக நடைபெற்ற நியூஸ் 7 தமிழின் “தங்கத் தாரகை” விருது வழங்கும் விழா

அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா தெரிவித்ததாவது..

“ மே 5ம் தேதி வணிகர் தின மாநாடு ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடைபெறும். தமிழகத்தில் அமைதியான சூழல் நிலவுகிறது இதில் சில விஷமிகள் அமைதியை சீர் குலைக்க சமுக வலைத்தளத்தில் பொய் தகவல்களை பரப்பி வருகிறது. ஆனால் அதனை வடமாநில தொழிலாளர்கள் நன்கு அறிந்துள்ளனர்.

தற்போது விழா காலம் என்பதால் சிலர் சொந்தவூர் சென்றாலும் தற்போதும்
வணிகர்களுடன் குடும்ப விழாவில் நடனமாடிய படி பங்கேற்றதை காணலாம்.  தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் . தமிழ்நாடு
அரசு, காவல் துறை, வணிகர் சங்க பேரமைப்பும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் உறுதி செய்துள்ளோம் “  என விக்கிரம ராஜ தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.