”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 70கும் மேற்பட்ட நூல்களை எழுதிய மா.நன்னன் என்னும் திருஞான சம்பந்தர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் மாசுப்ரமணியன்,…

”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

70கும் மேற்பட்ட நூல்களை எழுதிய மா.நன்னன் என்னும் திருஞான சம்பந்தர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் மாசுப்ரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது..

” பேராசிரியர் நண்ணர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவில் உங்களோடு கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பேராசிரியர் நன்னனின்  நுற்றாண்டு விழாவில்  புத்தக விழா வெளியீடு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியாரை போலவே நன்னனும் 90 வயது வரை வாழ்ந்தவர். அவருடன் கூட இருப்பவர்  சும்மா இருக்க விட மாட்டார், ஏதேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும் என கூறுவார். பெரியாரைப் போல, கலைஞரைபோல, நன்னன் போல ஒரு சிலரால் தான் இது முடியும்.

விழுப்புரத்தில் நடந்த இளைஞர் அணி கூட்டத்தில் நன்னனுக்கு மோதிரம் அணிந்தேன். வாரத்திற்கு இரண்டு முறையாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வார். நன்னன் அதிகமாக அறிவுரை வழங்குவார். எப்படி வாழ வேண்டும் என கற்றுக்கொடுத்தவர் நன்னன்.  நீதி கட்சியில் நுழைந்து,  திராவிட கழகத்தில் செயல்பட்டு,  திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிக தீவிரமாக  செயல்பட்டவர் நன்னன் என்பதற்கான அடையாளமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

” 2017 செப்டம்பர் மாதம் அறிவாலயம் வந்தார். அனைவரும் சந்தித்து உற்சாகமூட்ட வந்தேன் என்றார். ஒன்று அல்ல இரண்டு நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு, செயற்குழு என்றால் முதல் வரிசையில் வந்து அமர்ந்து தனது பங்கெடுப்பை வெளிப்படுத்தியவர். தனக்கென ஓர் எழுத்து , பேச்சு நடையை கொண்டவர் நன்னன் அவர்கள்

நன்னனின்  பேச்சுக்கள் திராவிட இயக்க வகுப்பு நடத்துவது போல் இருக்கும். சென்னை தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் தமிழ் வகுப்பு நடத்தியவர் அவர். தமிழ்நாடு அரசு சார்பில் நன்னனின் புத்தகம் நாட்டு உடமையக்க ஆக்கப்படும். பெரியாரின் நூல்களை 21 மொழிகளில் கொண்டு வருவதற்கான முன்னெடுப்பை எடுத்து வருகிறோம். பிற மாநிலத்தவர்கள் நாம் மாநிலத்தில் ஓர் பெரியார் இல்லையே என்று கூறுகின்றனர்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.