கரூரில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்திய மாவட்ட ஆட்சியர்!

கரூரில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி அருந்திய மாவட்ட ஆட்சியர்,  உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி…

கரூரில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி அருந்திய
மாவட்ட ஆட்சியர்,  உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் காலை
சிற்றுண்டி திட்டம் நடைமுறையில் உள்ளது.  இதில் மாநகராட்சிக்குட்பட்ட
காளியப்பனுர் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப பள்ளியில் 51 மாணவ, மாணவிகள் பயின்று
வருகின்றனர்.

இன்று காலை அந்த பள்ளிக்கு சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,  மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கோதுமை உப்புமாவை சாப்பிட்டார்.

அப்போது மாணவர்களிடம் உணவில் உப்பு,  காரம் எப்படி இருக்கிறது
என்றும் தரமாக இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார்.

மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு பணிக்கு சென்ற மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளும் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.