முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

ஆளுநரை மீண்டும், மீண்டும் திமுக சீண்டுவது சரியா ?

ஆளுநர் என்பவர் மாநில அரசிற்கு கட்டுப்பட்டவர்தான் என்ற கொள்கையில் திமுக தொடர்ந்து பயணித்து வருகிறது. அதுதொடர்பாக பல்வேறு இடங்களில் திமுக தலைவர்கள் பேசி வந்தாலும், தொண்டர்களிடம் ஆளுநருக்கான அதிகாரம் என்ன ? அவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஆனால் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை தமது அதிகார பூர்வ ஏடான முரசொலியில் பல்வேறு தலையங்கங்கள் மூலம் எடுத்துரைத்து வருகிறது. இப்படி ஆளுநரை அடிக்கடி சீண்டுவது சரியா என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் ரவி, நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தவுடன், இதனை முன்னமே செய்திருந்தால் தேவையற்ற பிரச்சனைகள் எழுந்திருக்காதே என முரசொலியில் தலையங்கம் வெளியானது. இந்நிலையில் மீண்டும் முரசொலி ஆளுநரை சீண்டியிருக்கிறது. இன்றைய முரசொலியில், பேரறிவாளன் வழக்கில் அவரது விடுதலை எல்கைகளை தாண்டி ஆளுநர்கள் பதவியையே கேள்விக்குறியாக்கி வருகிறது. கடந்த ஏப்ரல் 27ஆம் நாள் நடந்த விசாரணையின் போதே, ஆளுநரின் அதிகாரம், மாநிலத்தின் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டது என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வானது தெளிவுப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு ஆளுநர் அனுமதி தந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியதை அப்போதே நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்தார்கள். தானே முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறானது. இது இந்த நாட்டின் கூட்டாட்சித் கட்டமைப்புக்கு எதிரான மிக மோசமான முன்னுதாரணமாக அமைகிறது என நீதிபதிகள் குறிப்பிட்டார்கள் என கூறியுள்ளது. மேலும் இந்திய அரசியல் அமைப்பில் ஆளுநருக்கான அதிகாரங்கள் என்ன என்பதை கோடிட்டு காட்டும் முரசொலி, பேரறிவாளன் வழக்கு ஆளுநர்களின் அதிகாரமின்மையை உணர்த்துவதற்கு உதவி செய்கிறது என தலையங்கத்தை நிறைவு செய்துள்ளது

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிக்கையாளர் மணி, திமுகவை பொறுத்தவரை, ஆளுநருடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும் என விரும்புவதாக தெரியவில்லை. ஆனால் ஆளுநரோ தன்னை சூப்பர் சிஎம்மாக நினைத்துக் கொண்டு செயல்படுவதால், ஆளுநரின் ஒவ்வொரு செயலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பிரச்சனையில் ஆளுநர் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். கோவையில் உள்ள பாரதியார் பல்கலைகழகத்தில் ஆளுநர் ரவி பேசிய கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முரசொலி இப்படி ஒரு தலையங்கத்தை இன்று தீட்டியிருக்கலாம் என்றார். மேலும் மாநில அரசுடன் தாம் தொடர்ந்து முரண்பாடுவது நாட்டிற்கு நல்லதல்ல என்பதை ஆளுநர் உணர வேண்டும் என்றார்.

இராமானுஜம்.கி

Advertisement:
SHARE

Related posts

சங்கர் ஜிவால் உள்பட 5 அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து.

Saravana Kumar

நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!

Saravana Kumar

கொரோனாவை முற்றிலும் ஒழிக்கவேண்டும்:முதல்வர்!