முக்கியச் செய்திகள் மழை

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

தமிழ்நாட்டில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் ஆரம்பித்த அடுத்த நாளே அசானி புயலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால், கடும் வெயிலில் சிக்கித் தவித்த மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்திருந்தது.

அண்மைச் செய்தி: ‘Whatsapp-ல் பணம் அனுப்புபவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த செய்தி!’

இந்நிலையில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், சேலம், தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யலாம் எனவும், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் இன்று முடிவு

Saravana Kumar

10 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

Jeba Arul Robinson

டெல்லியிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை

Saravana Kumar