“ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும்?” – பிரேமலதா விஜயகாந்த்

ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும் என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.  கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதிகளில் மழையால்…

ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும் என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். 

கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதிகளில் மழையால் பாதித்த 200 குடும்பங்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

மக்கள் எப்போதும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருங்க வேண்டுமா? இது வருந்தத்தக்க விஷயம்.  எந்த ஏரியும் தூர்வாரவில்லை.  பல இடங்களிலும் மின்சாரம் இல்லை.  பால் கிடைக்காமல் ரொம்ப கஷ்டம்.  மியாட் மருத்துவனை முழுவதும் தண்ணீரில் இருக்கிறது. ஒரு நாளுக்கு இந்த கூத்து. தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் என்ன நிலைமை? மருத்துவ வசதிகள் கூட இல்லை.  ஒரு நாளில் சிட்டி மூழ்குகிறது.

இவ்வாறு குற்றம் சாட்டினார்.

இதனை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பேசிய அவர்,  விஜயகாந்த் உடல்நிலை குறித்து ஏன் தொடர்ந்து வதந்தியை பரப்புகிறீர்கள்?  விஜயகாந்த் நன்றாக இருக்கிறார்.  அவரைப் பற்றி இந்த அளவுக்கு வன்மம் ஏன்? தவறான செய்தியை போட வேண்டாம்.  விஜயகாந்த் மீது என்ன வன்மம்?  நல்லா இருக்கும் மனிதனை ஏன் இப்படி? அது எந்த அளவுக்கு பாதிக்கும்?

ஊர் வாயை எப்படி மூட முடியும்? விஜயகாந்த் பற்றி எப்போதும் தவறான செய்தியை போட வேண்டாம்.  விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நல்ல செய்தி வரும்.  நானே சொல்கிறேன்.

இவ்வாறு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.