இணையத்தில் கசிந்த சிவகார்த்திகேயன் 21 படக்காட்சி!

SK 21 திரைப்படத்தின் காட்சி  இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து, அக்காட்சியினை இணையத்திலிருந்து படக்குழு நீக்கியது. ‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில்,  சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான…

SK 21 திரைப்படத்தின் காட்சி  இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து, அக்காட்சியினை இணையத்திலிருந்து படக்குழு நீக்கியது.

‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில்,  சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. இத் திரைப்படம் நடிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று,  ரூ. 90 கோடி வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து,  சிவகார்த்திகேயனின் 21-வது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.  ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

SK 21 படப்பிடிப்பு நடைபெற்று வரும் வேலையில்,  இத்திரைப்படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.  இதனால், அதிர்ச்சியடைந்த படக்குழு அக்காட்சியினை  இணையத்திலிருந்து நீக்கியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.