செங்கல்பட்டு மாவட்டம்: 6 தாலுகாகளில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

மிக்ஜாம் புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்றுவருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்…

மிக்ஜாம் புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்றுவருவதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.  வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.  பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிச. 4 முதல் டிச. 7-ம் தேதி வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்ற வருவதால் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 6 தாலுக்காக்களுக்கு  உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 08) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.