முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கே வெற்றி: அமைச்சர் செந்தில் பாலாஜி

ஈரோடு கிழக்கு தொகுதியில், பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் எங்களுத்தான் வெற்றி எனவும், எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறப்போகிறோம் என்பதை பொருத்திருந்து பாருங்கள எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள் நேர்காணல் இரண்டாம் நாள் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளர்கள் கவுதம சிகாமணி மற்றும் எஸ் ஆர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று நிர்வாகிகளை நேர்காணல் செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த அணியில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரை, முதலமைச்சர் பொறுப்பாளராக நியமித்துள்ளார். அடுத்த தலைமுறைக்கு இந்த கழகத்தை எடுத்து செல்லும் வகையில் யோசித்து அவர்களை நியமித்துள்ளதாக கூறினார். இந்த அணியில் பொறுப்பு பெரும் நிர்வாகிகள், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நம் அணி சார்பில் எவ்வளவு வாக்குகளை பெற்று தர வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு பூத்துக்கு ஒரு கிரிக்கெட் அணியை நாம் சேர்த்தால் கிட்டத்தட்ட 7 லட்சம் பேரை கழகத்தில் சேர்த்து நாடாளுமன்ற தேர்தலுக்கு வலு சேர்க்க முடியும். திமுகவுக்கு 23 அணிகள் உள்ளன.சராசரியாக ஒவ்வொரு அணியும் 50 லட்சம் வாக்காளர்களை உறுப்பினர்களாக இணைத்தால், திமுகவை யாராலும் அசைக்க முடியாது, திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பணி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செஸ் போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற, பிறகு ஒட்டுமொத்தமாக தமிழநாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு எழுச்சி வந்துள்ளது என புகழ்ந்து கூறினார்.

இதனையடுத்து நேர்காணல் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈரோடு கிழக்கு தொகுதியில், பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் எங்களுத்தான் வெற்றி எனவும், எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறப்போகிறோம் என்பதை பொருத்திருந்து பாருங்கள எனவும், மக்கள் முதலமைச்சர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து மின்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அமைச்சர், மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி இருப்பதாகவும், இந்த சட்ட மோசோதாவை முதலமைச்சர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனவும் தெரிவித்தார்.

மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏப்ரல் மதம் வாட்ச் பில்களை தருவதாக கூறுகிறார் அண்ணாமலை. அதற்காக ஏன் ஏப்ரல் மதம் வரை காத்திருக்க வேண்டும். பில் இருந்தால் இப்போதே கொடுக்க வேண்டியதுதானே என்ற கேள்வியை எழுப்பியதோடு, இதிலிருந்தே தெரிகிறது அண்ணாமலை எந்த அளவிற்கு பச்சை பொய்யை சொல்லி வருகிறார் என்பது என அமைச்சர் கூறினார். அதேபோல் தைரியம் இருந்தால் தமிழ்நாடு பாஜகவின் உறுப்பினர் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்ல வேண்டும், நோட்டாவோடு போட்டி போட கூடியவர்கள் தான் பாஜகவினர் எனவும் விமர்சித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

Gayathri Venkatesan

கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்தி விடலாம்: ஆ.ராசா எம்.பி பேச்சு!

Arivazhagan Chinnasamy

வரலாற்றில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி பெண் – ஹார்வர்ட் சட்ட இதழின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ’அப்சரா’!

Yuthi
RBI அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் கரன்சியின் செயல்பாடுகள் வந்தான் சோழன்! வெளியானது பொன்னியின் செல்வன்!! சுவாமி விவேகானந்தரின் உலக பயணங்கள் ( 1893 – 1900) சென்ற இடமெல்லாம் வென்ற மாமன்னன் ராஜராஜன் சென்னை டூ மைசூரு – வந்தே பாரத் ரயில் பட்ஜெட் 2023-24; துறை வாரியான நிதி ஒதுக்கீடு பிரான்சின் செவாலியர் விருது பெற்ற தமிழர்கள் பிரிட்டனை ஆளும் இந்திய வம்சாவளி ரிஷி பழம்பெரும் நடிகைக்கு தாதா சாகேப் பால்கே விருது