முக்கியச் செய்திகள் சினிமா

நெட்டிசன்களிடம் சிக்கிய மஞ்சு வாரியர்; காரணம் என்ன?

லைசன்ஸே இல்லாமல், பைக் ரைடு சென்றது எப்படி என நடிகை மஞ்சு வாரியரை
நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம்?

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் மஞ்சு வாரியர் தமிழில்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் நடித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அசுரனில் மஞ்சு வாரியரின் இயல்பான நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும்
கவர்ந்தது. அதனை தொடர்ந்து அஜித் நடித்த துணிவு படத்திலும் மஞ்சு வாரியர்
நடித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி வெளியான துணிவு
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இந்நிலையில் கேரளா மாநிலம் கொச்சி, காக்காநாடு பகுதியில் உள்ள
ஆர்.டி.ஓ-விடம் தன்னுடைய பைக்கை ஓட்டிக்காட்டி லைசென்ஸ் பெற்றுள்ளார் நடிகை
மஞ்சு வாரியர். அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி
வருகிறது.

தற்போது இந்த விவகாரம் மஞ்சு வாரியருக்கு புதிய பிரச்னையை கொடுத்துள்ளது.
துணிவு படப்பிடிப்பின் போது நடிகர் அஜித், லடாக் பகுதியில் பைக் ரைடு சென்றார்.
அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் வைரலானது.
தற்போது இதை குறிப்பிட்டு தான் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
லைசன்ஸே இல்லாமல் அஜீத்துடன் பைக் ரைடு சென்றது எப்படி என நடிகை
மஞ்சு வாரியரை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டிரைவிங் லைசென்ஸ் என்ற மலையாள படத்தில், வெள்ளத்திரையில் ஜொலிக்கும் மெகா நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரித்விராஜ், லைசென்ஸ் வாங்குவதற்காக ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்வார். அப்போது பத்திரிகையாளர்கள், பிரித்விராஜிடம் லைசென்ஸ் எடுக்காமல்தான் படத்தில் கார் ஓட்டுவது போன்ற காட்சிகளில் நடித்தீர்களா என கேள்வி எழுப்புவதுபோன்ற காட்சி அமைந்திருக்கும்.

டிரைவிங் லைசென்ஸ் படத்தில் இடம்பெற்ற இந்த காட்சியை போன்றே, தற்போது நிஜத்திலும் டிரைவிங் லைசென்ஸ் வாங்கியுள்ள நடிகரை மஞ்சுவாரியரை நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளுடன் TROLL செய்து வருகின்றனர்.

இப்போது தான் லைசென்ஸ் வாங்கும் மஞ்சு வாரியர், எப்படி அஜித் உடன் இணைந்து பைக் ஓட்டினார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் போக்குவரத்து
விதிகளை பின்பற்றி தற்போதாவது லைசன்ஸ் எடுத்துள்ளாரே என்றும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”திமுக எம்எல்ஏ மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை” – அண்ணாமலை

G SaravanaKumar

காங்கிரஸ் தவறாக மக்களை வழிநடத்துகிறது : ஜெ.பி.நட்டா

Jeba Arul Robinson

ஜல்லிகட்டு போட்டியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்; முதலமைச்சர் அறிவிப்பு

Jayasheeba