WPL2023; கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்

இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் முறையாக இந்த ஆண்டு மகளிருக்கான டி20 போட்டியை அறிமுகம் செய்தது.

இதில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன.

இறுதி போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. 

இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் முறை நடந்த மகளிருக்கான டி20 போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

வெற்றிக் கோப்பையை முத்தமிடும் மும்பை அணியின் கேப்டன் கவுர்

வெற்றிக் களிப்பில் மும்பை அணியினர்!

வெற்றி பெற்ற களிப்பில் கட்டியணைத்த சகவீராங்கனைகள்!

சந்தோஷத்தில் திளைத்த மும்பை இந்தியன்ஸ்

பவர்புல் ஸ்டிரைக்கர் விருது டெல்லி அணியின் ராதா யாதவுக்கு வழங்கப்பட்டது.