குடியரசு தின கொண்டாட்டம் : தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்…!

2026ஆம் ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

2026 ஜனவரி 26ம் தேதி நாட்டின் 77வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வோரு ஆண்டு குடியரசு தினத்தன்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்காரா ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.

அதன் படி இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியானது பசுமை மின் சக்தி எனும் தலைப்பில் உருவாகியுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதற்கு தமிழ் நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.