மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நல்ல கல்வி மற்றும் சுற்றுச்சூழலை வழங்குவோம், என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் திருச்சி மாவட்டத்தில் களம் காணும் வேட்பாளர்களை, கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளரும், திருவெறும்பூர் தொகுதியின் வேட்பாளருமான எம்.முருகானந்தம் 25 உறுதிமொழிகளை முன்மொழிந்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், திறந்த சாக்கடைகள், போக்குவரத்து நெரிசல், குப்பை மேடுகள், ரிங் ரோடு இல்லாத சூழல், என அனைத்து ஊர்களிலும் எண்ணற்ற பிரச்னைகள் உள்ளதாகவும், திட்டங்களை எடுத்துக் கொண்டு தான் உங்களை சந்திக்க வந்துள்ளோம், என்றும் குறிப்பிட்டார். மேலும், வரும் வழியில் தனது வாகனத்தை சோதனை செய்தார்கள் என்றும், தனது வாகனத்தில் நேர்மையும், வேர்வையும் மட்டுமே இருக்கும், என்றும் நல்ல கல்வி, சுற்றுச்சூழல் ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதில், மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளதாகவும், கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்