முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விவகாரங்களில் பொய் கூறுவதாக அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
சமயபுரம் டோல்கேட் ரவுண்டானா அருகே, அமமுக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு டி.டி.வி.தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,“ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விவகாரங்களில் பொய் கூறுவதாக விமர்சித்த டிடிவி.தினகரன், கொரோனா காலத்தில் அரசு செயல்படாத போது, பெருமளவில் செலவு அறிக்கை தாக்கல் செய்தவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், என்றும் விமர்சித்தார். மேலும், திமுகவின் அரசியல் சூழ்ச்சியாலும் காழ்ப்புணர்ச்சியாலும் தான், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா சிறைக்கு சென்றனர், என்றும் டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டார். ஆனால், ஊழலுக்காக ஆட்சியை இழந்தவர் கருணாநிதி, என்றும் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டார்.







