உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி, கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் இந்த மாசித் திருவிழாவை முன்னிட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தும் அலகு குத்தியும், பாதயாத்திரையாக வந்தும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் பறவைக்காவடி எடுத்து வழிபாடு நடத்தினர். திருச்செந்தூர் தெப்பக்குளத்திலிருந்து கோவில் வரை பறவைக்காவடி எடுத்து பக்தி பரவசத்துடன் வேண்டுதலை நிறைவேற்றியது காண்போரையும் பக்தி பரவசப்படுத்தியது. தொடர்ந்து மாசித்ருவிழாவின் 5-ம் நாள் திருவிழாவான இன்று இரவு 07-00 மணிக்கு குடவருவாயுள் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா