இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது திபெத். திபெத்தில் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக திபெத்தில் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், திபெத்தில் நேற்று இரவு 8.29 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் நிலையில், 28.51 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.57 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.







