“டிச. 24ம் தேதி விண்ணில் பாய்கிறது புளூ பேர்ட் செயற்கைக்கோள்” – இஸ்ரோ!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மறுநாள் புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் பாய்கிறது.

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி காலை 8:54 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க பயன்படும் என்பதால் இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து நாளை மறுநாள் காலை 8:54 மணிக்கு LVM 3 ராக்கெட் வாயிலாக புளூ பேர்ட் செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இது குறித்து இஸ்ரோ நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “கிட்டத்தட்ட ஆறு பில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் டவர் பிரச்சினை நீக்குவதற்கும், பில்லியன் கணக்கானவர்களுக்கு பிராட்பேண்டைக் கொண்டுவருவதற்கும் நாங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.