மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுக வினர் கொண்டாடி வருகின்றனர். தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்த…

திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுக வினர் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு பிரதமர் மோடி,குடியரசு தலைவர் உள்ளிட்ட தேசிய தலைவர்களும்,தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும்
மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுமாறு கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் தலைமையில் திமுகவினர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 புதிய குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தனர்.

மேலும் அவர்கள் பேருந்து நிலையம் முன்பாக பட்டாசுகள் வெடித்தும்,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.முன்னதாக முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகளும்.தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.