முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் கூறிவருகின்றனர். பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்
இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக மாநில தலைவர் அண்ணாலை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ஆளுநர் ஆர்.என்,ரவி, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் உள்ளிட்டோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








