மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றன. இதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார் எக்ஸ் தள பதிவில்,
“மராட்டியம் வளர்ச்சியில் உறுதியாக நிற்கிறது. மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை கொண்ட எங்களுடைய அரசின் மீது உள்ள நம்பிக்கை இந்த வெற்றியால் பிரதிபலிக்கப்பட்டு உள்ளது. மராட்டியம் முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நோக்கங்களையும் நிறைவேற்ற புதிய சக்தியுடன் நாம் தொடர்ந்து ஈடுபாட்டுடன் பணியாற்றுவோம். அடிமட்ட அளவில் கடுமையாக பணியாற்றிய பாஜக மற்றும் கூட்டணியின் தொண்டர்களை நான் பாராட்டுகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







