கீழே கிடந்த பணத்தை போலீசில் ஜப்பானியர்கள் ஒப்படைத்துள்ளனர். அப்படி திரும்ப கிடைத்த பணம் கிட்டத்தட்ட ரூ.180 கோடியை உரியவர்களிடம் காவல்துறை வழங்கியுள்ளது.
ஜப்பான் நாட்டின் டோக்கியோ காவல் துறை கடந்த புதன்கிழமையன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் காவல்துறையில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள மொத்த தொஅகி 250 கோடியாகும். இந்த மொத்தத் தொகையில் 180கோடிக்கு மேல் பணத்தை அந்தந்த உரிமையாளர்களுக்குத் திருப்பி தந்துள்ளதாக ஜப்பான் காவல்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள உரிமை கோரப்படாத பணம் அரசு நிர்வாகத்திற்கு செல்வதாகவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜப்பானின் சரக்கு மற்றும் சேவை சட்டம் ” யாரேனும் பணம் அல்லது பொருட்களை கீழே இருந்து கண்டுபிடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அப்படி திரும்ப ஒப்படைக்கும் நபர் பணத்தின் உரிமையாளரிடம் இருந்து 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வெகுமதியாகப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இந்த சட்டம் தெரிவித்துள்ளது.
இதனால் 2022 ஆம் ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 3.43 மில்லியன் அளவு தொலைந்து போன பொருட்கள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது 2021 ஆம் ஆண்டை விட 21.9 சதவீதம் அதிகமாகும் என்றும் காவல் துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனையும் படியுங்கள்: 40 மணி நேரம் தொடர்ந்து அலைச்சறுக்கு: ஆஸ்திரேலிய வீரருக்கு குவியும் பாராட்டுகள்!
காவல் துறையின் லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் சென்டரின் (Lost and Found Center) புள்ளிவிவரங்கள் 2015 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலத்தில் தொலைந்து போன பொருட்களின் எண்ணிக்கை சுமார் 4 மில்லியனாக இருந்தது.
அடையாள அட்டைகள் மற்றும் இன்சூரன்ஸ் அட்டைகள் போன்ற ஆவணங்கள், சுமார் 7,30,000 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல சுமார் 3,90,000 தொலைந்து போன பயணிகள் பாஸ் மற்றும் சான்றிதழ்களும் கண்டுபிடிக்கப்பட்டன.