தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டும் முயற்சியில் இதுவரை நடைபெற்ற மிக நீண்ட அலைச்சறுக்கு சாதனையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர் முறியடித்துள்ளார்.
40 வயதான பிளேக் ஜான்ஸ்டன், தெற்கு சிட்னியில் உள்ள க்ரோனுல்லா கடற்கரையில் 40 மணி நேரம் அலைச்சறுக்கு செய்து மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்குக் கடலுக்குச் சென்று வெள்ளிக்கிழமை மாலை வரை தொடர்ந்து அலைச்சறுக்கில் ஈடுபட்டுள்ளார். ஒரு சிறிய இடைவேளையின் போது, ஜான்ஸ்டன் “எல்லாம் வலிக்கிறது” என்று கூறினார். “நான் என் வாழ்நாள் முழுவதும் அலைச்சறுக்கில் ஈடுபட்டேன், ஆனால் ஒருபோதும் சுலபம் இல்லை. இது மன மற்றும் உடல் ரீதியான சவாலாக இருந்தது “என்று அவர் கூறினார்.
இந்த உலக சாதனை முயற்சியைக் கண்டுகளிக்கவும், ஆதரவை வழங்கவும் கடற்கரையில் மக்கள் கூடியிருந்தனர். சம்பி புல்லின் அறக்கட்டளைக்குப் பணம் திரட்ட ஜான்ஸ்டன் இந்த கடினமான சாதனையை நிகழ்த்துகிறார். 2020 இல் இறந்த தொழில்முறை பனிச்சறுக்கு வீரர் அலெக்ஸ் “சம்பி” புல்லின் நினைவாக இந்த தொண்டு நிறுவனம் நிறுவப்பட்டது.
வெயில், நீர்ப்போக்கு, சுறாக்கள் மற்றும் கடல் ஸ்டிங்கர்கள் உள்ளிட்ட ஆபத்துகளுடன், தண்ணீரில் 40 மணிநேர உடல் உழைப்பும் காண்போரை வியப்படையச் செய்தது. அறக்கட்டளைக்கு 2,50,000 டாலர்கள் திரட்ட திட்டமிடப்பட்டது மற்றும் 2,00,000 டாலர்கள் ஏற்கனவே நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.