இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்புகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி
ஏசி மெக்கானிக், கார்பென்டர், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், உள்ளிட்ட 13 பிரிவுகளில் மொத்தம் 2801 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதியை பொருத்த வரை, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் துறை சார்ந்த பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அதே போல் ஏப்ரல் 11, 2026 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 15 வயதுக்குக் குறையாமலும், 24 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். இதில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு முறை மற்றும் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் http://www.scr.indianrailways.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் ‘Careers’ பக்கத்தின் மூலம், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.







