அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே ஊதியம், ஒரே தேர்வுக்கட்டணம் – அமைச்சர் பொன்முடி ஆலோசனை

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம், தேர்வுக்கட்டணம், நிர்வாகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை ஆய்வுக்கூட்டம், அத்துறையின் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு…

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம், தேர்வுக்கட்டணம், நிர்வாகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை ஆய்வுக்கூட்டம், அத்துறையின் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் ராமசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். நான் முதல்வன் திட்டம், பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு, நிரப்ப வேண்டிய காலியிடங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “எல்லா பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம், தேர்வுக்கட்டணம், நிர்வாகம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் ஒரு மாத காலத்தில் அறிவிக்கப்படும்.

இதையும் படியுங்கள் : இறந்த மனைவிக்கு கோயில் கட்டிய விவசாயி – திருப்பத்தூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வுக்கட்டணம் அதிகரித்துள்ளதாக போராடி வருகின்றனர். பழைய கட்டணமே அவர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை செயலரின் அனுமதி பெற்ற பின்னரே டாக்டர் பட்டம் வழங்குவது போன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் சட்ட முன்வடிவு தொடர்பாக ஆளுநர் தரப்பிலிருந்து சரியான நடவடிக்கை வரும் என கருதுகிறோம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.