வரும் கல்வியாண்டில் 75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் தொடர்புத் துறை சார்பில், அரசின்
ஓராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் திறந்துவைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்பொழுது பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பில் ஆல்பாஸ் ஆனவர்கள். அவர்களுக்கு தேர்வு பயம் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்திருக்கும். எனவே, அவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுத வேண்டும் என்பதற்காகவே, அனைவரும் தேர்வு எழுத வாருங்கள், அனைவருக்கும் ஹால் டிக்கெட் தருகிறோம் என கூறினோம். ஆனால், அடுத்த ஆண்டு இந்த நடைமுறை பின்பற்றப்படாது.
இதையும் படிக்க: 21 குண்டுகள் முழங்க மேஜர் ஜெயந்த் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்!
ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது. கொரோனா காலத்தில் பள்ளிகள் முழுமையாக செயல்படாமல் இருந்த நேரத்தில் அளிக்கப்பட்ட வாய்ப்பு அது, வரும் கல்வியாண்டில் 75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறையே அமலில் உள்ளது என்றார்.
-ம.பவித்ரா