ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனம்- அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் என்பது இன்றைய காலகட்டத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏராளமானோர் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை…

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் என்பது இன்றைய காலகட்டத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏராளமானோர் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை விரும்புகின்றனர். அதற்கேற்ப ஆன்லைன் ஆப்களும், ஆஃபர் அறிவித்து வாடிக்களையாளர்களை ஈர்த்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க ஆன்லைனில் ஷாப்பிங் செய்து ஏமாறுகின்ற சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

இதையும் படிக்கவும்: இனி வாட்ஸ்ஆப் Desktop-லும் வீடியோ கால் பேசலாம்!

அந்தவகையில், கர்நாடக மாநித்தை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப் கார்டில் ( Flipkart)கடந்த 2021ம் ஆண்டு ஐபோன் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வந்த ஆர்டருக்கான பார்சலை திறந்த போது அவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அதில் ஐபோனுக்கு பதில் 140 கிராம் எடையுள்ள நிர்மா சோப் மற்றும் சிறிய கீபேட் போன் அதில் இருந்தது. ஆனால் ஐபோனுக்காக அவர் ரூ.48, 999 அவர் செலுத்தியிருந்தார். இதனை பார்த்து மனவேதனை அடைந்த அந்த மாணவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு பிளிப் கார்ட் மற்றும் அதன் சில்லறை விற்பனையாளருக்கு ரூ.25000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், “இப்போது ஆன்லைன் ஷாப்பிங் எல்லா இடங்களிலும் பரவி வருகிறது, ஏனெனில் இது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. ஆனால் தயாரிப்புகளை விற்ற பிறகு நிறுவனங்களின் பொறுப்புகள் முடிவடையாது. ஏனெனில் இது அந்நிறுவனத்தின் கடமையாகும். நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அவர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தவறான பொருட்களை/தயாரிப்புகளை அனுப்புவதன் மூலமோ, நுகர்வோரின் பணத்தை அபகரிக்க எந்த உரிமையும் கிடையாது” என்று ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.