கடைசி டி 20 போட்டி ; திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அபாரம்….தென் ஆப்பிரிக்காவிற்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகளில் இந்தியாவும் ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன.  லக்னோவில் நடக்க இருந்த 4-வது டி 20 போட்டி கடுமையான பனிமூட்டத்தால் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனை தொடர்ந்து இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்துகளில் 73 ரன்களும் ஹார்திக் பாண்டியா 25 பந்துகளில் 63 ரன்களும் விளாசினர். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் கோர்பின் போஸ்ச் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 232 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.