இனி வாட்ஸ்ஆப் Desktop-லும் வீடியோ கால் பேசலாம்!

கணினி மற்றும் லேப்டாப்பில் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்தும் போதும் இனிமேல் வீடியோ கால் செய்யலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய நவீன காலத்தில் சமூக வலைதளங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.…

கணினி மற்றும் லேப்டாப்பில் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்தும் போதும் இனிமேல் வீடியோ கால் செய்யலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய நவீன காலத்தில் சமூக வலைதளங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், ஷேர்சாட் என்று பல்வேறு சமூக வலைதளங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதையும் படிக்கவும்: சாதிய வன்கொடுமையால் தூய்மை பணியாளருக்கு நேர்ந்த கொடூரம்; உறவினர்கள் போராட்டம்

இதில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமூகவலைதளமாக வாட்ஸ் ஆப் அமைந்துள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் பல புதிய அம்சங்களை அவ்வப்போது அந்நிறுவனம் அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்ஸ் நோட்டை ஸ்டேட்டசாக வாட்ஸ் ஆப்-ல் வைக்க முடியும் என்ற புதிய அப்டேட்டை அந்நிறுவனம் தெரிவித்தது.இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய வசதியை வாட்ஸ் ஆப்  நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் வாட்ஸ் ஆப் வெப் மூலம் கணினியில் இணைத்திருக்கும் பொழுதும், இனிமேல் வீடியோ கால் செய்யலாம். இதில் நபர்கள் வரை குழு வீடியோ கால் பேசமுடியும். வாய்ஸ் காலில் 32 நபர்கள் வரை ஒரே நேரத்தில் அழைப்பில் இணைந்திருக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த புதிய அப்டேட்டால் வாட்ஸ் ஆப் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிமேல் கணினி அல்லது லேப்டாப்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் போதும் நம்மால் வீடியோ கால் பேசமுடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.